முன்பொரு செய்தி அமர்க்களமாக அடிபட்டது.
பாலிவுட் நடிகர் அமீர்கான் மனிதரில் புனிதர் .கோதுமை மாவுப் பாக்கெட்டுக்குள் 15 ஆயிரம் ரூபாய் வைத்து கொரானாவினால் பாதிக்கப்படட ஏழைகளுக்கு கொடுத்திருக்கிறார் என்பதாக பாலிவுட் ஊடகம் சிலவற்றில் செய்திகள் வெளியாகின.அந்த மாவுப் பாக்கெட் எடை ஒரு கிலோ. டெல்லியில் பலர் வாங்க மறுத்து விட்டார்கள் .ஆனால் வாங்கியவர்கள் அந்த மாவுக்குள் 15 ஆயிரம் ரூபா இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் .இதன் பிறகு போட்டியிட்டுக் கொண்டு வாங்கினார்கள் என்பதாக செய்தி.
பாராட்டுக்கள் குவிந்தன அமீர்கானுக்கு !
மிகவும் அற்புதமான புதிய வழியில் உதவி செய்திருக்கிறார் என்று சமூக வலைத் தளங்களிலும் வாழ்த்தினார்கள்.
ஆனால் அவரே பொறுக்கமாட்டாமல் “நான் கோதுமைப் பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுக்கல. அந்த செய்தியே முழுப்பொய். நான் ஒன்னும் ராபின்ஹூட் இல்லை” என்பதாக தனது டிவிட்டர் தளத்தில் அறிவித்திருக்கிறார்.
இல்லாத மாவுக்கு ஏனய்யா இப்படியொரு விளம்பரம்?