இயக்குநர் ஏ.எல் விஜய் இன்று அழகான ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார். இவரது அண்ணன் நடிகர் உதயா பெரியப்பா ஆகிவிட்ட பூரிப்பில் அனைவர்க்கும் இனிப்பு வழங்கி கொண்டாடிவருகிறார்.
விஜய்யின் வாழ்க்கையில் இது ஒரு பொன் நாள்.ஒரு வகையில் அவருக்கு மிகப்பெரிய கவுரவமும் கூட.!
நடிகை அமலாபாலை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு சில மாதங்கள் மட்டுமே நிம்மதியாக வாழ்ந்த அவரால் அந்த திருமணத்தினால் மகிழ்ச்சியாக வாழ முடிந்ததா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதாகத்தான் இருக்க முடியும்.
விவாகரத்து பெற்று விலகிய பின்னர் பெற்றோர் பார்த்து கல்யாணம் செய்து வைத்த மணமகள்தான் டாக்டர் ஐஸ்வர்யா .கடந்த ஆண்டு ஜூலையில் திருமணம். இந்த ஆண்டு கையில் ஆண் வாரிசு.இதுதான் இல்லறம்.பையன் பிறந்த நேரம் படங்கள் வெற்றிப்படங்களாக அமையட்டும்.தலைவி படம் மிகவும் எதிர்பார்க்கிற படம்.
வாழ்க மணமக்கள் .!