“நான் 13 வயசிலேர்ந்து நடிச்சிட்டிருக்கேன் .அலுக்கல . .நடிப்புன்னா எனக்கு பைத்தியம். ஹீரோயினாவே நடிக்கிறதினால் சலிப்பும் வரல. டான்ஸ்னா எனக்குப் பிடிக்கும் அதனால ஆடுறேன்.மூச்சு இருக்கிறவரை நடிக்கணும்கிற ஆசை இருக்கு “என்கிறார் தமன்னா.
இவ்வளவு ஆர்வமாக இருக்கிறவர் அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதற்காக அயிட்டம் டான்ஸ் ஆடலாமா?
நியாயமான கேள்விதானே?
“தெரியும் .மீடியாக்களில் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதிகமாக பணம் கிடைப்பதால் தமன்னா அயிட்டம் டான்ஸ் பண்ணுகிறார். பணத்தாசை பிடித்த பேராசைக்காரி என்கிறார்கள் .எனக்கு நடனம் ஆட பிடிக்கும்.அதனால் சினிமாவிலாடுவதை விரும்புகிறேன் .அது சாதாரணமானதாகவோ .ஸ்பெஷல் டூயட்டாகவோ இருக்கலாம் நான் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதை விரும்புகிறேன்.எனது கடைசி மூச்சு இருக்கிறவரை சினிமாவை நேசிப்பேன் “என்கிறார் தமன்னா.
“