காதல் என்பது யாருக்கு வரும் ,எப்போது வரும் என்று ஜோதிடமெல்லாம் சொல்ல முடியாது. அதே கதைதான் ராஷ்மிகா மந்தனாவினுடையது.!
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார்.
கன்னட நடிகர் ஒருவரை காதலித்து வந்த ராஷ்மிகா, திடீர் கருத்து வேறுபாடால், நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் அந்த நடிகருடனான காதலை முறித்துக்கொண்டார். என்ன செய்வது விதியின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் மீடியாக்கள் சும்மா விடுமா?
கீதா கோவிந்தம் படத்துக்கு பிறகு தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தான் ராஷ்மிகாவின் தற்போதைய காதலர் என கிசுகிசுக்கிறது.
இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களிடம் உரையாடிய போது பலரும்,அவரது விஜய தேவரகொண்டாவுடனான ரிலேஷன்ஷிப் குறித்தே கேட்டனர்.
ரசிகர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளை கண்டு சற்றும் அசரவில்லை ராஷ்மிகா,
“எனக்கு தெரிந்தவர்கள் எல்லோருடனும் என்னுடைய பெயரை சேர்த்து பேசுபவர்களுக்கு.. நான் சிங்கிள்தான்.. நான் அதைத்தான் காதலிக்கிறேன்..தனிமையில் இருப்பதை பற்றி நான் பேசுகிறேன்.. என்னை நம்புங்கள், “. என மிகவும் சாமர்த்தியமாக பதிலளித்து ரசிகர்களை வாயை அடைத்து விட்டார்.