பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரண விவகாரத்தில், முதலில் சினிமா வாரிசு நடிகர், நடிகைகள் பற்றி விளாசித்தள்ளியவர் கங்கனா, .
கரண் ஜோஹர், மகேஷ்பட் உள்பட சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை பாலிவுட் மாஃபியா என கடுமையாக விமர்சித்து இருந்தார். பிறகு பாலிவுட்டில் போதை மருந்துகள் இல்லாமல் பார்ட்டிகள் இல்லை என்றும், சில நடிகர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார்கள் என்கிற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார்.
மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா என்று கேட்ட விவகாரத்தில்,சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக ட்விட்டரில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.
இதற்கிடையே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், ‘கங்கனா நடிக்க இருந்த இந்தி படத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அசவுகரியமான நிலையை உணர்ந்ததால், அதை அவர்களிடம் சொன்னேன். புரிந்து கொண்டார்கள். சில நேரங்களில், மனதில் எது சரியென படுகிறதோ அதுவே முக்கியம். அந்தப்படக் குழுவுக்கு வாழ்த்துகள்’ என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
வைரலாக பரவிய பி.சி.ஸ்ரீராம் டுவிட்டுக்கு, நடிகை கங்கனா, ‘உங்களைப் போன்ற மேதை களுடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இது முற்றிலும் எனக்கு இழப்பு. உங்களுக்கு அசவுகரியமான எண்ணம் தோன்ற என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான முடிவை எடுத்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்’ என்று தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.