விக்ரம்பிரபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை மதுரையில் ஆரம்பம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கொம்பன் முத்தையா இயக்குகிறார் .இதற்காக முழு ஏற்பாடுகளும் மதுரையில் நடக்கிறது.
அடுத்து ஹைதராபாத்தில் இருக்கிற ராமோஜி ராவ் திரைப்பட நகரில் அண்ணாத்தே படத்தின் எஞ்சிய பகுதியை படமாக்குகிறார்கள். நாளை தொடங்கவிருக்கிற படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது .ஆனால் ஹைதராபாத்தில் கொரானா ஆபத்து அதிகம் இருந்து வருவதால் ரஜினி செல்வாரா என்கிற சந்தேகத்தையும் இலவச இணைப்பாக கூடவே சேர்த்து தருகிறார்கள்.இந்த செய்தி காலையில் பதிவாகும் 11.45 மணி வரை ரஜினி போவது பற்றி உறுதி செய்யப்படவில்லை.