
சின்ன வேடமாக இருந்தாலும் அது படமாக வெளிவருகிறபோது அந்த காட்சி இல்லாது போனால் அந்த நடிகர் படுகிற துன்பம் இருக்கிறதே அளவிடற்கரியது.
உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி தயாரித்த ‘ஹே ராம்’ படத்தில் நவாஜுதீன் சித்திக் என்கிற பாலிவுட் பிரபலம் நடித்திருந்தார்.
கப்பிய குரலில் கண்ணீர் விடாத குறையாக கூறினார்.ஸ்பாட்பாய் என்கிற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:
“நான் நடித்திருந்த படங்களில் நடித்திருந்த சிறு காட்சிகள் இல்லாதுபோகும்போது நான் படுகிற வேதனை சொல்ல முடியாதது. நான் மிகவும் பெருமையாக ,உதாரண புருஷனாக நினைக்கப்படுகிறவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரின் பெயரை சொல்லவும் தயங்குவேன்.
அவர் ஹே ராம் இயக்கி நடித்தபோது அவருக்கு நான் கோச்சராகவும் இருந்தேன். எனக்கு சிறிய வேடம் கொடுத்திருந்தார்.திலீப்குமார் ,நஸிருதீன்ஷா அந்தோணி ஹாப்கின்ஸ் ,டென்ஜெல் வாஷிங்டன் ஆகியோருடன் கமல்ஹாசனையும் சேர்த்து பார்க்கிறவன். அவர் எனக்களித்தது சிறு வேடமாக இருந்தாலும் பெரிதாக நினைத்திருந்தேன்.கமல்ஜியை தாக்குகிற கும்பலில் பலியாகிற வேடம் எனக்கு.
ஆனால் அந்த காட்சி வெட்டப்பட்டுவிட்டது. என்னால் தாங்க முடியவில்லை .கடுமையாக அழுதுவிட்டேன்.என்னால் தாங்க முடியவில்லை. ஸ்ருதிஹாசன்தான் என்னை ஆறுதல் படுத்தினார்” என்கிறார் நவாஜ் .
இப்படியும் பக்தி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.












