
யாரையும் சந்திக்காமல் தனியாகவே இருந்துவந்தவர் ரஜினிகாந்த்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்துவந்தார்.
இத்தகைய சூழலில் தான் நமோ நாராயணா சாமியார் போயஸ்கார்டன் ரஜினி வீட்டுக்கு வந்திருக்கிறார்.வரும்போது முக கவசம் அணிந்திருந்தார்.
சில சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.வழிபாட்டுக்குப் பின்னர் ரஜினிக்கு ஸ்படிக மாலையை சாமியார் அணிவித்திருக்கிறார்.
சாமியாருடன் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார் ரஜினி.அப்போது இருவருமே முக கவசம் அணியவில்லை. இதனால் ரசிகர்கள், மற்றும் மக்கள் மன்றத்தினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
சரி ,எதற்காக இந்த சிறப்பு பூஜைகள்?
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டது என்று ரஜினி மக்கள் மன்ற முக்கிய பிரமுகர் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவருகிற வரை அவரை நம்புவோம்.!












