பூமி படத்தின் இயக்குனர் லட்சுமணன் .
ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாக நடித்திருந்தார்.அவருக்கு தாய் நிலம் மீது இருந்த பற்று ,பாசம் காரணமாக தமிழகம் திரும்பி வந்து விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
நிலம் மலடாக்கிவிடக்கூடாது ,விவசாயிகள் அழிந்து விடக்கூடாது ,கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயம் ம்போய் விடக்கூடாது என்பதற்காக போராடுவார்.
இதுதான் பூமியின் அடிநாதம்.
ஆனால் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்துக்கு அவ்வளவாக வரவேற்பில்லை .
விமர்சகர்களும் விட்டு விளாசியிருந்தனர்.
டிவிட்டரில் ஒரு சினிமா ரசிகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். “ஒன்றுமே புரியவில்லை” என்பதாக.
அதற்கு தன்னுடைய கோபத்தை டைரக்டர் லட்சுமணன் பதிவு செய்திருக்கிறார்.
“சார் ,நான் எதுக்காக அந்த படம் பண்ணனும்?
நம்ம எல்லாரும் ,எதிர்கால தலைமுறையினரும் நன்றாக இருக்கட்டும்னு நெனச்சேன்..உங்களுக்காகத்தான் எடுத்தேன் சகோ.!
ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்சியல் தெரியாதா?
நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் சகோ!
நீங்க சூப்பர் சகோ.நீங்க செயிச்சிட்டிங்க.நான் தோத்துட்டேன்”
மேற்கண்டவாறு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.