Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“கொள்ளை அடிக்கிறார்கள்.அடக்குங்கள்”!.!ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!

admin by admin
May 5, 2021
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் நீதி மையத்தலைவர் கமல்ஹாசன் இன்று மாலையில் அவசர அறிக்கை விடுத்திருக்கிறார்.

You might also like

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி ‘திடீர்’ விலகல்!

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

நாளை மறுநாள் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கவிருக்கிறார் தி.மு.கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின் .அவருக்கு இந்த அறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.?

இதோ…..

“கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாக செலுத்தினால்தான் அனுமதி. அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும். ரசீது கிடையாது. எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சார்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணம் படைத்தவர்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனர்.

உதாரணமாக, நுரையீரல் தொற்று எந்தளவிற்கு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் ரூ.1500/-ல் துவங்கி ரூ.8,000/- வரை விதம் விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,000/- துவங்கி ரூ.10,000/- வரை வசூலிக்கிறார்கள். இப்படியாக கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது.

ஒரு மருத்துவரின் சேவைக்கான கட்டணம் அவரது கல்வி, அனுபவம், திறமை பொருத்து மாறுபடலாம். நோயாளிகள் எதிர்பார்க்கும் லக்ஸூரியைப் பொருத்து அறை கட்டணம் மாறுபடலாம். ஆனால், மருத்துவப் பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆம்புலன்ஸ் என ஒவ்வொன்றும் தமிழகம் முழுக்க வெவ்வேறு கட்டணங்களில் பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது.

அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திரு. மு.க. ஸ்டாலின் இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

– கமல் ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்

Tags: அவசர அறிக்கைகமல்ஹாசன்தமிழக முதல்வர்மக்கள் நீதி மய்யம்மு.க.ஸ்டாலின்
admin

admin

Related Posts

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி ‘திடீர்’ விலகல்!
News

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி ‘திடீர்’ விலகல்!

by admin
June 14, 2026
இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில்  ‘சின்ன சின்ன ஆசை’!
News

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

by admin
June 14, 2026
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026

Recent News

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில்  ‘சின்ன சின்ன ஆசை’!

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

June 14, 2026
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?