டிவி. நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமான தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. ஏகப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகைகளைப்போலவே தனெக்கென ஒரு இடத்தை தக்க வைத்துகொண்டுள்ளார்
இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் உதவி இயக்குநருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை டிடி விவாகரத்து செய்தார்.இதையடுத்து பிரபல தொகுப்பாளினியான டிடியை சுற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வலம் வந்தாலும், அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் தனது கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் அதிரடியாக வெளிப்படையாகவே பதிலடியாக கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் அவர் உரையாடும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.ரசிகர் ஒருவர், உங்களுடைய கடந்த கால வாழ்க்கையின் சில கசப்பான அனுபவங்கள் தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறதா?என கேள்வி எழுப்ப, “முடிந்தது முடிந்த து தான் அது தரும் பாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என பட்டாசாய் பதில் அளித்தார்.
இரண்டாவது காதல் குறித்த நம்பிக்கை இருக்கா? என மற்றொருவர் கேள்வி எழுப்ப, “அதென்ன செகண்ட் லவ்.. லவ் ஒரு தடவை தான் வருமா? இல்லை இரண்டு தடவை வருமா? அதெல்லாம் சும்மா சினிமாவுல தான். காதல் வாழ்வின் ஒரு அங்கம். அது எப்போதுமே நம்மோடவே இருக்கும் . ஒரே நேரத்துல நாலு பேர லவ் பண்ணாதான் தப்பு.. ஆனால், வாழ்க்கையில ரெண்டு மூணு லவ் இருந்தா கூட தப்பில்லை” என நெத்தியடியாக கூறியுள்ளார்.