
பலவிதமான இடையூறுகளைக் கடந்து ‘மாநாடு’ திரைப்படப் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்தது. 
படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ,இயக்குநர் வெங்கட் பிரபு ,நாயகன் சிலம்பரசன் ஆகியோருடன் சிறப்புடன் கொண்டாடி விட்டனர்.
சிலம்பரசன் கேக் வெட்டி பகிர்ந்து கொண்டார்.விலை உயர்ந்த கடிகாரங்களை இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு அன்புப்பரிசாக வழங்கினார்.
இந்த படத்தில் கல்யாணி பிரியதர்சன், எஸ்.ஜெ.சூர்யா ,அஞ்சனாகீர்த்தி ,உதயா ,பிரேம்ஜி அமரன் ,இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார் .
ஒளிப்பதிவு ரிச்சர்டு எம்.நாதன் ,ஸ்டண்ட் சிவா ,மக்கள் தொடர்பு ஜான் .












