வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து கவுதம்மேனனின், ‘வெந்து தணிந்தது காடு’,மற்றும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘பத்து தல’ என அடுத்தடுத்த படங்களில் சிம்பு மும்முரமாக நடித்து வருகிறார்.
இது தவிர சிம்பு,ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ஹன்சிகாவின் 50 வது படமான ‘மஹா’ வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் குடும்ப கதை களத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சிம்பு,ஹன்ஷிகா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால், இது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.