நெல்சன் திலீப்குமார். இயக்கத்தில, விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில்,இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், விஜய் டிரம்ஸ் வாசிப்பது போன்று அமர்ந்திருக்க, அவரது பின்னால் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே மைக்கில் பாடுவது போன்றும் இவர்களை சுற்றி,இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர் கிங்க்ஸ்லிஆகியோர் கிடார் வாசிப்பது போன்றும் விடிவி கணேஷ் ட்ரம்பெட் வாசிப்பது போன்றும் காட்சியளிக்கின்றனர்
இப்புகைப்படத்துக்கு கேப்ஷனாக “இது நூறாவது நாள் ஷூட்டிங். இந்த அருமையானவர்களுடனான கலகலப்பான 100 நாட்கள்!” என்றும் பதிவிட்டுள்ளார்.













