சிம்பு நடிப்பில்,வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.பலரும் சிம்புவை கொண்டாடி வருகின்றனர் இதையடுத்து மேலும் கூடுதலாக திரையரங்குகளும் அதிகமான காட்சிகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தியவர்களுக்கு ட்விட்டரில் நன்றி கூறி வருகிறார்.
நடிகர் சூர்யா.ஆர்யா,சிவகார்த்திகேயன் மனோபாலா,ராகவாலாரன்ஸ்,சாந்தனு,ஹரிஷ் கல்யாண்,அனிருத் ,சித்தார்த்,ரமேஷ் பாலா,கிருஷ்ணா என வாழ்த்திய பலருக்கும் நன்றி தெரிவித்து டுவிட் செய்துவருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல் தமது ட்விட்டர் பக்கத்தில், “படத்தின் (மாநாடு) முடிவில் இருக்கும் டீசரை மிஸ் பண்ணிவிடாதீர்கள்” என்று ரசிகர்களுக்கு குறிப்பிட்டு மாநாடு-2 என்கிற ஹேஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
இது சிம்பு ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.













