Axess Film Factory சார்பில் G.டில்லிபாபு தயாரித்துள்ள படம், ‘பேச்சுலர்’. அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கிறார். GV பிரகாஷ், திவ்யபாரதி இனைந்து நடித்துள்ளனர், என்பதை விட மிக நெருக்கமாகவே இணைந்துள்ளனர். என்றே சொல்லவேண்டும்.
இந்தப்படத்தின் போஸ்டர்களும், ட்ரைலரும் வெளியான நிலையில் அது பேசுபொருளாக ஆனது. இந்நிலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியான பின்னர் இன்னும் அதிகமாகவே பேசப்படும்.
‘பேச்சுலர்’ படம் குறித்து படத்தின் கதநாயகன் GV பிரகாஷ் கூறியதாவது….
‘இந்தப்படம் ஆண், பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன்.
தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார்.
முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது அது திவ்யபாரதிக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நடிக்கும் போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார்.
ஈஸ்வர் சார் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஷான் லோகேஷின் எடிட்டிங்கிற்கு ரசிகன் நான். நான் தப்பிச்சிட்டேன் சித்துகுமார் மாட்டிக்கொண்டார். ஆனால் பராவாயில்லை, அருமையான மியூசிக் தந்திருக்கிறார். இந்தப்படத்தில் கோவையின் உண்மையான சிலாங்கை கொண்டு வந்திருக்கிறோம். அனைவருககும் பிடிக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி. என்றார்.