ஒரு காலத்திலே ஊத்துப் பட்டை எடுத்துட்டுப்போய் வைகையில் எந்த இடத்தில் ஊத்துத் தோண்டினாலும் இளநீ தண்ணி மாதிரி ஊத்து வரும் .குளிச்சிட்டு வரலாம்.
எப்ப மண்ணை அள்ளிட்டு போக ஆரம்பிச்சாய்ங்களோ ,அப்பவே வைகையின் மொகம் கரடு முரடாய் மாறிடுச்சு.ஊத்தும் இல்ல.அந்த வைகையைத்தான் டைரக்டர் தாமரைச்செல்வன் இப்ப நதிங்கிற பேர்ல சினிமாவா எடுத்துருக்கார் போல.!
ஒரு காலத்தில் மதுரை கொலை நகரமா இருந்துச்சு .ஜட்காவில் போகிறபோதே வேல்கம்பை உள்ளே விட்டு குடல் குந்தாணியை எல்லாம் உருவிடுவாய்ங்க. அரசியல் மீட்டிங்கில் பாம்பு விடுறதில் இருந்து மலைப்பிஞ்சு வீச்சு நடத்துற வரை கில்லாடிக்கும் வெள்ளை அடிக்கிற ஜில்லா போக்கிரிங்க வாழ்ந்த ஊரு.
ஆனா அந்த ஊரு இப்ப இல்ல. திருந்திட்டாய்ங்கன்னுதான் நெனைக்கிறேன்.
மதுரை தூத்துக்குடி ,திருநெல்வேலி இதெல்லாம் அரசியல் கொலைகளுக்கு அஞ்சாத பயக ஊரு .அந்த காலத்தில டீ கடை வச்சிருந்த திமுக மதுரை முத்து உடம்பெல்லாம் வரி வரியா வெட்டுக்காயம் இருக்கும். டீக்கடை பாய்லர்ல கொதிக்கிற தண்ணிய இந்த மாவட்ட செயலாளர் மீது ஊத்தி தியாகி ஆக்கினாய்ங்க. அதெல்லாம் மதுரை சரித்திரம்.
அதை நினைச்சிக்கிட்டு,போக்கிரிப்பய ஊராவே இப்பவும் நெனைச்சா எப்படி?
மதுரைன்னாலே பட்டாக்கத்தி ,வேல்கம்பு ,வீச்சருவா தானா? வாழ விடுங்கய்யா மதுரைக்காரய்ங்கள!
தாமரைச்செல்வன் டைரக்ட் பண்ணிருக்கார் நதிங்கிற படத்தை.
“ஒரு காலத்தில நாங்க கட்டி ஆண்டவய்ங்கடா . நாங்க இருந்த தெருப்பக்கம் கூட நடக்கமாட்டிங்கடா நீங்க ” இப்படி ஒரு டயலாக்.
சாதிப்பேயை இன்னும் சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காய்ங்கன்னுதான் தெரியுது !
வேல.ராமமூர்த்தி , இவருக்கு தம்பி ஏ ஜெகதீஷ் ,கரு.பழநியப்பன் .அரசியல் குடும்பம் .ஒண்ணுக்குள்ள ஒன்னுன்னு வாழுற ஆளுங்க. அசந்தா வெட்டி சாய்ச்சிக்குவாய்ங்க அப்படிப்பட்ட ரத்த உறவு. இந்த குடும்பத்து கயல் ஆனந்தியும் ,ஆட்டோ ஓட்டுற முனீஸ்காந்த் மகன் சாம் ஜோன்சும் காதலிக்கிறாங்க. இத வச்சுதான் கதையை ஓட்டுறாய்ங்க.
அரசியல் ,தேர்தல் இதெல்லாம் ஒட்டுத்துணி மாதிரி.குடுகுடுப்பைக்காரன் பை !
சாம் ஜோன்ஸ் இன்னும் வெரைட்டியா முகத்தை காட்டுறத்துக்கு கத்துக்கணும்.
கயல் ஆனந்தி ,முனீஸ்காந்த் ரெண்டு பேரும் ஜிகர்தண்டா குடிச்சமாதிரி. ஜாலியா இருக்காய் ங்க . மத்த எல்லோருமே ஜிஞ்சர் போதையில வெறப்பா திரியிறாய்ங்க. இதான் மொத்த படமும்.
திபு நினன் தாமஸ் மியூசிக் .சொல்ற மாதிரி இல்லிங்க.படமும் அப்பிடியே!