
காணாமல் போன கோடிக்கணக்கான தங்கத்தை கண்டு பிடிப்பதற்காக ஒரு கோஷ்டி தீவிரமாக செயல்படுகிறது. நினைவு தவறிப்போன அரவிந்தசாமிக்கு நினைவு திரும்பினால் ஒருவேளை சாத்தியப்படலாம் என்று குஞ்சாக்கோ போபனை நியமிக்கிறார்கள் .அது சாத்தியமானதா ,நடந்தது என்ன என்பதை காரில் பயணித்தபடியே சொல்லுகிறார்கள்.
நமக்கு நல்ல அனுபவம்.!
ஒரு தியேட்டரில் பாப்கார்ன் விற்கிற அரவிந்தசாமியை கண்டு பிடித்து அவருடன் பாசமுடன் பழகுகிறார் போபன்.பலவழிகளில் அவரது நினைவு திரும்புவதற்கு பாடுபடுகிற போபன் மங்களூருக்கு அழைத்து சென்றால் ஒருவேளை சாத்தியமாகலாம் ,என திட்டமிட்டு அவரை காரில் அழைத்து செல்கிறார்.
இதன்பின்னர் என்ன நடந்தது என்பதை சுவாரசியமுடன் சொல்லுகிறார்கள்.
அரவிந்தசாமியின் அமைதியான தோற்றம் ,ஆனால் அவருக்குள் பெரும் பூகம்பமே புதைந்து கிடக்கிறது , அடுத்தடுத்த காட்சிகளில் வெடிக்கிறபோது பார்க்கிறபோது பிரமிக்க வைக்கிறார். ஜாக்கி செராப்பின் மாளிகையில் அவரை ஜட்டியோடு புரட்டி எடுக்கிற காட் சியில் மிரள்கிறோம்.
குஞ்சக்காபோபன் சிறப்பு. ஈஷாரெப்பாவுடனான காதல், ஆடுகளம் நரேனுடனான பாசம் அரவிந்த்சாமியுடனான பயணம் என எல்லா இடங்களிலும் வெகு சிறப்பு. அவரது ஆசை கடைசியில் நிராசையில் முடிகிறது என்பது சோகம்தான்.!
பெண்களை நம்பாதே கண்களே , பெண்களை நம்பாதே என்பதைப்போல ஈஷாரெப்பாவின் கேரக்டர் அமைந்திருக்கிறது.. வெல்டன் ஈஷா !
கெளதம்ஷங்கரின் ஒளிப்பதிவு, அருள்ராஜ்கென்னடியின் பின்னணி இசை கதைக்கு துணையாக இருக்கின்றன.
கதை ,திரைக்கதையை எழுதியிருக்கிறார் எஸ்.சஞ்சீவ், இயக்கியிருக்கிறார் டி.பி.பெளினி.
“நான் டேவிட் என்றால் கிச்சு யார்? என்று குஞ்சக்காபோபன் கேட்பதும் அதற்கு அரவிந்த்சாமி சொல்லும் பதிலும் ஆழமானவை.












