
இதுவும் சாதியப் படம்தான்.!
நாயகன் விக்னேஷ் ,நாயகி ஆரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும் வெவ்வேறு சாதி.!ஆனால் காதலிக்கிறார்கள்..
அவர்களை ஒன்று சேர விடுவார்களா ?
காதலன் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் காதலி .நிறைவேறியதா ?
சாதிய அழுத்தம் காரணமாக விக்னேஷ் அடங்கிப்போகிறார்.அழுந்தப்படுவதை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலுக்காக வீட்டை துறக்கும் நாயகி ஆரா .அந்த கிராமத்து மைனா.. கட்டுப்பாடுகளை உடைத்து எறிகிற மனப்பான்மையை இயக்குநர் தைரியமாக வெளிப்படுத்துகிறார்.
“எங்க வீட்லயெல்லாம் தண்ணி குடிப்பிங்களா? என்று நாயகனின் அம்மா கேட்டவுடன் ஆரா தட்டில் சோறு எடுத்துப்போட்டு சாப்பிடுவதை மறக்க இயலாது.
டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
செரா.கலையரசனின் இயக்கத்தில் துணிச்சலுடன் வெளியாகி இருக்கிற படம். பல இடங்களில் வசனங்கள் தீக்கங்குகளாக இருக்கின்றன.டாக்டராக ஊருக்கு திரும்புகிற நாயகனை சாதியம் பலி வாங்குவது இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகிறது.












