
“என்னுடன் நடிப்பதற்கு நடிகர்களில் சிலர் பயப்படுகிறார்கள்.அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பாவம் அவர்கள் மோடிக்குப் பயப்படுகிறார்கள்”என்கிறார் வெர்சடைல் ஆக்டர் பிரகாஷ் ராஜ்.
இவர் தேசிய விருது பெற்றவர்.தன்னுடைய நடிப்பாற்றலினால் மக்களிடம் அன்பினைப் பெற்றிருக்கிறார். இவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும் .ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு நியாயம் செய்கிறவர்.
மற்ற நடிகர்களை போல அரசியலை விட்டு இவர் ஒதுங்காமல் தீவிரமான அரசியலில் இருக்கிறார்.
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து வருகிறார்.தேர்தலில் போட்டி இட்டிருக்கிறார்.ஆனால் வெற்றி வாய்ப்பு இல்லாது போயிற்று.ஆனாலும் தன்னுடைய நிலையில் இருந்து சற்றும் பின் வாங்க வில்லை. பிரதமர் மோடியின் அரசியலை கடுமையாக தாக்கிவருகிறார்.
இதனால் இவர்க்கு தற்போது சிக்கல்.படங்களில் வாய்ப்பு கொடுப்பதற்கு அஞ்சுகிறார்கள். சக நடிகர்களில் சிலர் இவருடன் நடிப்பதற்கு பயப்படுகிறார்கள். எங்கே தங்களுக்கு ஆபத்தாகிவிடுமோ என்கிற அச்சம் .
“நான் எனது கொள்கையிலிருந்து விலகினால் அல்லது பின்வாங்கினால் ஆதிக்க சக்திகளுக்கு இடம் கொடுத்தது மாதிரி ஆகி விடும் .அதனால் நான் பின்வாங்கப்போவதில்லை. எனது கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் .எனது உறுதி சில நடிகர்களுக்கு சவுகரியமாக இருக்கவில்லை என்பதால் விலகி செல்கிறார்கள்.அல்லது என்னுடன் நடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.”என்கிறார் பிரகாஷ் ராஜ்.
“நான் அரசியல் பேசுவதால் ஏற்படுகிற விளைவுகளை கண்டு அஞ்சவில்லை.தைரியமாக எதிர்கொள்வேன்.அச்சமில்லை அச்சமில்லை “என்கிறார் குணசித்திர -வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ்.












