பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் இப்படம் குறித்த புது தகவலை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், ஒருபக்கம் கோட் ஷூட் அணிந்த நிலையில் உதயநிதியும் மறுபக்கம் பக்கா அரசியல்வாதி லுக்கில் ஒருவரும் நிற்கின்றனர்.வரும் 1ந் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்













