கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைய உள்ளார்..(கடந்த 1987ல் இவர்களது கூட்டணியில் நாயகன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது)
இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க,த்ரிஷா,மற்றும் நயன்தாரா பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது கமலின் 234 படத்தில் பாலிவுட் நாயகி இருக்கும் வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை