தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தற்போது ‘தேனாண்டாள் ஸ்டுடியோஸ்’ முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தற்போது 2023 – 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடக்கிறது.இதில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறது.
இன்று காலை வாக்கு பதிவு தொடங்கிய நிலையில்,பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை அடையாறில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு வந்து நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.













