ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் ’மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கௌரவ் காளை, பிரவின் மற்றும் கௌரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர்
நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து ஒரு திரைப்படத்தை படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
. ’பூவரசம் பீப்பி’, ’சில்லு கருப்பட்டி’, ’ஏலே’ மற்றும் ’லோனர்ஸ்’ (அமேசான் பிரைமில் வெளியான ஆந்தாலஜி ’புத்தம் புது காலை விடியாதா’வின் ஒரு பகுதி) உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகள் காரணமாக ‘மின்மினி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.













