தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி,பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் தற்போது தமன்னா தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை தமன்னாவிற்கு தற்போது 33 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக சுற்றி வருகிறார்.
இந்நிலையில், நடிகை தமன்னா பாலிவுட் இளம் நடிகரான விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடிகர் விஜய் வர்மாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி இவர்களிடையேயான காதல் சர்ச்சையை மேலும் உறுதிப்படுத்தியது.
. ஆனால், இதுதொடர்பாக இருவருமே எந்தவித கருத்தும் கூறாமல் இருந்தனர். அதேநேரம், மும்பையில் இருவரும் அடிக்கடி ஜோடியாக வலம் வந்தனர். இதையடுத்து இருவரும் காதலிக்கிறீர்களா என கேட்டபோது, “நாங்கள் ஒன்றாக ஒரு படம் நடித்துள்ளோம். இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமில்லை” என்று தமன்னா பதிலளித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகை தமன்னா ஊடகம் ஒன்றில் கூறியுள்ளதாவது,, “ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவர்மீது காதல் கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு எத்தனையோ சக நடிகர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஒருவர் யாரிடமாவது காதல் கொள்ள வேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் எதாவது இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்காக என்ன செய்கிறார்கள் என்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது நடக்கக் காரணம் அதுவல்ல என்று நான் நினைக்கிறேன்.
“லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் தான் விஜய் வர்மா உடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் மிகவும் எதிர்பார்க்கும் நபர் அவர். அவருடனான எனது உறவு என்பது மிக மிக இயல்பாக ஏற்பட்டது. தனக்கான எல்லாவற்றையும் விட்டுவிட்டு எனக்காக வந்தவர். அதனால் எனது கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வருவது எனக்கு மிகவும் எளிதாகிவிட்டது.
சாதிக்கும் பெண்கள் தனக்கான எல்லாவற்றிற்கும் கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கும் பிரச்சனை உள்ளது. ஆனால் மிகவும் எளிமையாக இருக்கும் போது, நீங்களாக கடினமாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்தியாவில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதையும் யாரோ ஒருவருக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.
உங்களுக்கான சரியான நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், நீங்கள் உடல் ரீதியாக அல்லது அந்த நபரின் புரிதலுக்கு உதவும் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் எனக்காக ஒரு உலகத்தை உருவாக்கியது போல் உணர்ந்தேன்.
நான் எதுவும் செய்யாமலேயே அந்த உலகத்தைப் புரிந்துகொண்ட ஒரு நபர் எனக்கு கிடைத்தார். அவர் என் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டநபர், ஆம், அவர் என்னுடைய மகிழ்ச்சிக்கான இடம்” என விஜய் வர்மாவுடனான காதல் குறித்து தமன்னா குறிப்பிட்டுள்ளார்
இந்தி நடிகரான விஜய் வர்மா கடந்த 2012ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிங்க் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் அப்பாய் படத்தில் விஜய் வர்மா வில்லனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது













