
நடிகர் வடிவேலு,விவேக் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் பாவா லட்சுமணன். இவருக்கு அண்மையில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக அவரது கால் கட்டை விரலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது