பத்து தல’ படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இப்படத்தில் போர் வீரராக நடிக்கும் சிம்பு,அதற்கு தேவையான சில பயிற்சிகளை மேற்கொள்வதற்காக தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளார். அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க பட உள்ளது.
வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்பு ,ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.
ஒரு கெட்டப்பில் உடல் எடை கூடியும், மற்றொரு கெட்டப்பில் உடல் எடையை குறைத்தும் கமலின் ஆளவந்தான் ஸ்டைலில் நடிக்க போகிறாராம். அதற்கான முயற்சியில் தான் சிம்பு,தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












