‘மாவீரன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் (எஸ் கே 21) புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டு வந்த நிலையில்,தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்
அப்பதிவில்,” “காஷ்மீருக்கு நன்றி, இந்த 75 நாள் படப்பிடிப்புகளும் புதுமையாக இருந்தது.இடைவிடாத முயற்சியில் ஈடுபட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றி. குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன் சார் உள்ளிட்டவருக்கு நன்றி” என்று பதிவிட்டு,’எஸ்கே 21′ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்
.முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வண்ண கலவைகளை உடல் முழுவதும் பூசி கொண்டு மிகவும் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.