
சமீபத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்நிலையில், நேற்று மாலை சென்னை லயோலா கல்லூரி மாணவர் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்
அப்போது .தற்கொலை எண்ணத்தை கடந்து வாழ்க்கையில் சாதிப்பது எப்படி என்பது குறித்து அவர் பேசுகையில்,”சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இளைஞன் ஆன பின்னர் 20 வயது 21 வயது இருக்கும் போது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது. அப்போது எனக்கும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றியது.
ஆனால், என்ன ஆகுதுன்னு பாத்துடலாம்னு ஒரு குருட்டு தைரியத்தி்ல் கடைசிவரை முயற்சி செய்ய முடிவெடுத்தேன் இப்போ உங்கள் முன் கமல்ஹாசனாக நிற்கிறேன். மரணம் அனைவரும் வாழ்விலும் ஒரு அங்கம்.
அது வரும் போது வரட்டும். நாமாக அவசரப்பட்டு விடக்கூடாது. தற்கொலை எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர் என்ன மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சனைகளுக்காக பெரிய முடிவை எடுத்து விடக்கூடாது என உலகநாயகன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.













