‘சீதா ராமம்’ போன்ற கிளாசிக் மற்றும் ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற கேங்ஸ்டர் படங்களைத் தொடர்ந்து, பான் இந்திய நடிகராக மாறியுள்ள துல்கர் சல்மான்,தற்போது, தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்துக்காக இணைந்துள்ளார்.இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
‘ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்’ என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஒன்லைன். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படம் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு. .சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் . ‘சார்/வாத்தி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.