துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில்,அசர்பைஜானில் நடைபெறவுள்ளது என்கிறார்கள்..
தன்னுடைய ஓமன் பைக் டூரை முடித்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ள அஜித், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல உள்ளார்.
இப்படக்குழுவினர் வரும் 30ம் தேதி தங்களது பயணத்தை துவங்கவுள்ளனர்.
இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
அசர்பைஜானில் 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின் சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் ஏற்கனவே கதை ஒன்றை கூறியுள்ளாராம்..
இந்த கதையில் நடிக்க தற்போது அஜித் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தை பார்த்த அஜித் தற்போது தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிசந்திரனுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.













