மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்து, ஜெயமுருகன் டி எம். கதை, இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘தீ – இவன்’.இதில் நவரச நாயகன் கார்த்திக் ஹாலிவுட் குயின் சன்னி லியோன் கார்த்திகை தீபம் புகழ் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, சுமன்.து, ஹேமந்த்;, ஸ்ரீதர், சாரப்பாம்பு சுப்புராஜ், கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள ஜெயமுருகன். கூறியதாவது..”பராசக்தி மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் தான் தீ-இவன் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார். யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் ஆனால், நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் அந்த வித்தையை இப்படத்தில் பார்க்கலாம்.
அதே சமயம் ஆழமான கலாச்சாரத்தைச் சொல்லும் போது. ஆம்பள கெட்டா வாழ்கைபோச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு என்று சொல்வார்கள் அதன் படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆனோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், தாலி கட்டாம தாயாவதும், தாலி கட்டாம தாரமா வாழ்வதும் தரங்க கெட்ட செயல் என்றும் சொல்வார்கள்.
அதுபோல முறையற்ற வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வு மட்டு மல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதையும், ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களா இருந்தால் தான் நல்ல சமூகம் படைக்க முடியும் என்ற சமூக நீதியையும் சொல்லும் சமூகப் பார்வை கொண்ட படைப்பு தீ-இவன். என்கிறார்.விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது..