
கதையா,ஆக்டிங்கா ,கவர்வது கருத்தா ,என இனம் பிரித்து சொல்ல முடியாத ஒரு படம். தல அஜீத் நடித்த படத்தில் அவரது கேரக்டர் பெயர் தூக்கு துரை .இந்த பெயரில் ஒரு பாடம் நமக்கு.!
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் தயாரித்துள்ள படம், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கம் . யோகி பாபு, இனியா, . மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ், சென்றாயன், நமோ நாராயணன், அஷ்வின் உள்ளிட்ட பலர் கதையின் மாந்தர்கள். சரி, படம் தேறுமா ?கதையின் ஒன் லைன் என்ன?
பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்த ஒரு கிரீடம் காணாமல் போக ,அதை தட்டிட்டுப் போன போக்கிரி யாரு,பூதம் யாருங்கிறது ஒன்லைன்.! இயக்குநர் மஞ்சு நாத் பரபரன்னு படம் ஓடும்கிற நம்பிக்கையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். யோகிபாபு ,இனியா ரெண்டு பேரும் கடனை கழித்த மாதிரி வந்து போயிருக்கிறார்கள்.
மன்னர் வம்சத்தினை சார்ந்தவர் மாரிமுத்து. இவரது மரணம் பெரிய லாஸ் என்பது நிஜம். இ வரது முன்னோர் ஒருவர், தன் தலையை துண்டித்து, ஊர் சாமிக்கு கொடுத்ததினால் தலையை துண்டித்து கொண்ட, மன்னனின் கிரீடத்தினை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இது கதை. ஒரு நாள் அது காணாமல் போக குழப்பம் .. டிவிஸ்ட் வைக்கனுமே ன்னு யோகிபாபுவை ஆவியாக மாற்றி மக்களை கொடுமைப் படுத்துகிறார்கள். அந்த கொடுமையிலிருந்து நம்மை காப்பாற்றி இருக்கிறாரா இயக்குநர்?
ஊர்த் திருவிழாவில், பயாஸ்கோப் காட்டும் நபராகவும், இனியாவை காதலிப்பவராகவும் உருப்படியா வேற எதுவும் பண்ணல. நாயகனே இப்படின்னா நாயகி இனியா? பாவம் விடுங்க !
நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன் ஆகியோருக்கு சரியான சான்ஸ். ஆள் இல்லாத கோல் போஸ்ட்ல பந்தை தள்ளிவிட்டு சக்சஸ் காட்டுகிறார்கள்.
கிராபிக்ஸ் ஒரு சில இடங்களில் பராட்டும் படி உள்ளது.அப்படா பாராட்டும்படி இதாவது இருந்ததே !
ஒளிப்பதிவு, கலை, படத் தொகுப்பு, பின்னணி இசை ஆகியன கவனிக்கும் படி இருக்கிறது.
தூக்குதுரை ,தூக்கத் துரை !
—தேவிமணி












