இசைஞானி பல நேரங்களில் கோப ஞானியாக தான் இருப்பார் என பலரும் கூறுவதுண்டு,அவரது பேச்சு பல முன்னணி நடிகர்களை, பாடகர்களை, தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை மற்றும் ரசிகர்களைக் காயப்படுத்தியாகவும் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட இளையராஜாவை சிரித்து சிரித்து மனம் நெகிழவைத்துள்ளார்கள் ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் அவரது நண்பர்களான ‘தி பேஸ் பேண்ட்’ இசைக் குழுவினர். இவர்கள் அனைவரும் சமீபத்தில் இளையராஜாவைச் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது இளையராஜாவைச் சுற்றி நின்றுகொண்டு, ” இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச் செல்லய்யா… ஜென்மம் பல உன் பாட்டைக் கேட்கச் சொல்லய்யா… இசைஞானி இளையராஜா.. என்னை ஆளும் இதய ரோஜா..” எனப் பாடினர். இவர்களின் பாட்டைக் கேட்ட இளையராஜா நெகிழ்ந்து போனார்.அதன் பின்னர் இவர்கள் அனைவரும் இளையராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவை தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவுக்கு கேப்ஷனாக , “பேரிசை பெருமகனார் இசைஞானி இளைராஜாவால் ஆசீர்வதிக்கப்பட்ட தருணம்” என குறிப்பிட்டுள்ளார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.













