விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிசிலில் வசூல் வேட்டை நடத்திய 12வது ஃபெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது “அவரது பதிவில், “கடைசி சில ஆண்டுகள் எனது வாழ்வில் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கணவர், தந்தை, மற்றும் மகனாக எனது வீட்டை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.வரும் 2025ஆம் ஆண்டு கடைசியாக ஒரு முறை நாம் திரைப்படங்களில் சந்திப்போம். கடைசி 2 படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன்” என கூறியுள்ளார்.













