திருநெல்வேலியைச் சேர்ந்த அறிவுடை நம்பி,வளர்ந்து வரும் அரசியல் வாதி. காதல் கலப்பு திருமணம் காரணமாக வஞ்சகமாக கொல்லப்பட, மனமுடைந்த அறிவுடை நம்பியின் காதல் மனைவி அகல்யா, அரளி விதையை அரைத்து தன் குழந்தைக்கு கொடுத்து விட்டு தானும் குடிக்கிறாள். இதில் குழந்தை தமிழரசன் மட்டும் பிழைத்து விட, அகல்யா இறந்து விடுகிறாள். பிறந்த உடனே பெற்றோரை இழந்ததால், எமன் என்ற பெயருடன் அழைக்கப்படும் தமிழரசன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகிப் பழிவாங்கும் அரசியல் கதைதான் எமன்.பொதுவாக நல்ல வலுவான கதைகளையே தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது என்றே தெரிய வில்லை, பிச்சைக்காரனுக்கு பிறகு எல்லாமே சொதப்பல் மயம் தான்! பிச்சைக்காரன் பெற்ற வெற்றியின் காரணமாக தன்னை விஜய்,அஜித் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டதால் இது நடந்து இருக்கலாம்.படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள்.ஒட்டுமொத்தமாக அது படத்தின் வேகத்தையே காலி செய்து விடுகிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனதற்கு வில்லன்களின் ஆக்கிரமிப்பே காரணம்.தங்கபாண்டியனாக வரும் அருள்ஜோதி நடிப்பில் நம்மை ஈர்க்கிறார்.கதாநாயகி மியா ஜார்ஜ், வீணடிக்கப்பட்டிருக்கிறார்.சார்லி,தியாகராஜன், மாரிமுத்து, சார்லி, சங்கிலிமுருகன் வந்து போகிறார்கள்.பாடல்கள் படத்திற்கு பெரும் உறுத்தல்.காட்சிகளை இயக்குனர் இலக்கு இல்லாமல் இஷ்டத்துக்கு இழுத்திருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவு. எமனுக்காக விஜய் ஆண்டனி ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்றே சொல்லலாம். விஜய் ஆண்டனிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு……?