ஏய், மலை மலை, வாடா, வல்லக்கோட்டை போன்ற படங்களை த் தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘சண்டமாருதம். இதில், சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கிறார்.இவருடன், ஓவியா, மீரா நந்தன், ராதிகா, சமுத்திரக்கனி, ராதாரவி, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ,இப்படம் குறித்து சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது,, ‘சண்டமாருதம் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு சர்ட்பிகெட் கிடைத்துவிட்டது என்றும், விபரங்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்படத்தில், சரத்குமார் ஒரு பாடலையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.












