பாலிவுட்டில் ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ உள்ளிட்ட பல படங்களின் மூலம் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சீமா பிஸ்வாஸ்,கடந்த , 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்தொடரில் நடித்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நடிகை சீமா பிஸ்வாஸ் கூறியதாவது,, “புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இயக்குநர் ராமு செல்லப்பா அர்ப்பணிப்பு, விடாமுயற்சி கொண்டவர்.மொழிபெயர்ப்பாளர் மூலம் எனக்கு கதை சொல்ல அவர் மும்பைக்கு வந்தார். படப்பிடிப்பு தளத்தில் மொழி எனக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டேன். ஆனால், படப்பிடிப்பு முழுக்க இயக்குநர் ராமு செல்லப்பா எனக்கு உதவி செய்தார்” என்றார்.













