தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.இவரது தங்கை ஐஸ்வர்யாவுக்கும் நகைக்கடை அதிபர் உம்மிடி உதய்குமார்- உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் மகனான உம்மிடி கிரிட்டிஸ்க்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், நடிகர் விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.5.5 கோடி கடன் பெற உடந்தையாக இருந்ததாகவும், ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக கிரிட்டிஸ் இருந்துள்ளார். மேலும் மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













