‘கங்குவா’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நீண்ட வருட இடைவெளிக்கு பின் திரிஷா நடிக்கிறார்.இவர்களுடன் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர் இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைத்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.கடந்த நவம்பர் மாத இறுதியில் பொள்ளாச்சியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகும் பிரமாண்ட பாடல் காட்சி அடுத்த வாரம் சென்னை ஈசிஆரில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்குள் அருண் வெஞ்சாரமூடு வடிவமைப்பில் கோடிகளில் செலவிடப்பட்ட ஒரு பிரமாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்கப்படவுள்ளது இது ஒரு வண்ணமயமான திருவிழா பாடலாக இருக்கும், மேலும் இப்பாடல் காட்சியில், ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் சூர்யா மற்றும் திரிஷாவுடன் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடுவார்கள். என்கிறார்கள்.













