தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ராம்சரணின் 16 வது படமாக உருவாகும் புதிய படம்,’பெடி’.இப்படத்தில் ராம் சரணுடன் கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ,ஜெகபதி பாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை விருத்தி சினிமாஸ் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். இந்நிலையில் ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த படக்குழுவினர் இப்படத்தின் ( பெடி )டைட்டில் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்இதில் ராம் சரண் ஒரு முரட்டுத்தனமான மிரட்டல் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.. துளையிடும் கண்கள் – கலைந்த கூந்தல் – சீர் படுத்தாத தாடி மற்றும் பிரத்யேக மூக்கு வளையத்துடன் அசைக்க முடியாத ஆதிக்கத்தினை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. கரடு முரடான உடையில், ஒரு சுருட்டினை புகைக்கும் ராம் சரண் – மன்னிப்பு கேட்காமல் கடுமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். இதனுடன் இணைந்து வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டரில், அவர் ஒரு பழைய கிரிக்கெட் மட்டையை ஏந்தி இருப்பதை காண முடிகிறது. பின்னணியில் வெள்ளை விளக்குகளால் ஒளிரும் ஒரு கிராமப்புற அரங்கமும் இடம்பிடித்திருக்கிறது. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான திரைக்கதையை குறிப்பதாக உள்ளது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொண்டுள்ளார்













