நடிகர் விஜய் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார் . தனது கடைசிபடமாக ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல கதாநாயகனாக களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,அவரோ இயக்குனராக களமிறங்கியுள்ளார். பிரபல நிறுவன தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகனாக சுந்தீப் கிஷன் நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது என்கிறார்கள்.இந்நிலையில் இப்படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஜதி ரத்னாலு படத்தில் நாயகியாக நடித்த பரியா அப்துல்லா தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் . என்கிறார்கள். நடிகை ஃபரியா அப்துல்லா தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற ஜதி ரத்னாலு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர் தமிழில் ஏற்கனவே நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக வள்ளி மயில் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.













