நடிகை சோனா தயாரிப்பில் உருவான ’ஸ்மோக்’ வெப் தொடரின் ஹார்ட் டிஸ்க்கை, அவரது முன்னாள் மேலாளர் அபகரித்து கொண்டதாகவும், அதை திரும்ப பெற வேண்டுமென்றால் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டி இருந்த நிலையில், திடீரென பெப்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினார். இவ்விவகாரம் மீடியாக்கள் மற்றும் இணையத்தில்வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. .இந்நிலையில் இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடியாக தலையிட்டு, பேச்சு வார்த்தை நடத்தி , சோனாவின் ஹார்ட் டிஸ்கை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து , நடிகை சோனா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் “யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில், நடிகர் சங்கம் தலையிட்டு என் பிரச்சனையை தீர்த்து வைத்தது மிகவும் நன்றிக்குரிய விஷயம்,” என்று தெரிவித்துள்ளார்.













