சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர நடிகை ஷிவானி நாராயணன் கமல்ஹாசனின் விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா சுரேந்திரனுக்கு பதில் முதன் முதலாக ஷிவானி நாராயணனை தான் தனுஷ் அணுகியதாகவும், ஆனால் அந்த வாய்ப்பை தானே தவற விட்டுவிட்டதாகவும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஷிவானி நாராயணன் கூறியுள்ளதாவது,”தனுஷ் சாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததும், ‘விஸ்டம் டூத்’ கடவாய்ப் பல் அகற்றியிருந்த வலியுடன் அங்கு சென்றேன். . சிவனின் தீவிர பக்தர் தனுஷ். ஷிவானி என்பதால் தான் என்னை நடிக்க அழைத்ததாக கூறினார். ஹீரோவுக்கு செட்டாவேனா என்றெல்லாம் பார்த்தார். அடுத்த வாரம் கால் வரும் வந்துடுங்க என்றார். அதே போல கால் வந்தது. ஆனால், நான் தான் அந்த வாய்ப்பை சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக தவற விட்டேன். அதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறேன் ” என்றவர், படிப்புக்காக சில ஆண்டுகள் புதிய படங்களை ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் சீக்கிரமே லண்டன் போய் செட்டில் ஆக முடிவு செய்திருப்பதாகவும் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது













