வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம் !

‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் வைக்கம் விஜயலட்சுமி.பார்வையற்ற இவரது வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலபாடகி .இவரது வாழ்கை வரலாறு கூட மலையாளத்தில் சினிமா படமாக தயாராகிறது. இந்நிலையில்,வைக்கம் விஜயலட்சுமிக்கும்,கேரளாவைச் சேர்ந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அனூப் என்பவருக்கும்வரும் (செப்டம்பர் 10-ஆம் தேதி) நிச்சயதார்த்தம் நடக்கிறது.. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 22-ஆம் தேதி வைக்கம் மகாதேவ் கோவிலில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளது. முன்னதாக கடந்த வருடம் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி, கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.