சிம்பு மீது போலீசில் மோசடி புகார்! ஓன்று கூடிய தயாரிப்பாளர்கள்!
சுந்தர். சி. இயக்கத்தில் வெளியான, ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து சிம்பு, வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த வருடம் தகவல்கள் வெளியாகின.
ஆனால் சிம்புவோ, அவரது முன்னாள் காதலி ஹன்சிகாவின் 50 வது படமான ‘மகா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாகவும், கவுதம் கார்த்திக் நடிக்கும் கன்னட படமான ‘மப்டி’ தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும், இப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் மாநாடு படம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்தை கடந்து விட்ட நிலையில், சிம்பு இப்படத்தை தொடங்குவது குறித்து எதுவும் அறிவிக்காமல் வெளிநாடு சென்று விட்டதால்,வெறுத்துப்போன படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை இப்படத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும், சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சிம்பு, ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, நடிக்கவுள்ளதாக சிம்பு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால்,மாநாடு படத்தின் தயாரிப்பாளர் ‘மகா மாநாடு’ படத்தின் கதை என்னுடையது என தயாரிப்பாளர் கவுன்சிலில் புகாரும் கொடுத்தார்.
இந்நிலையில்,சிம்பு, ஒப்புக்கொண்டபடி கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை,சிம்புவை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Related Posts

இதையடுத்து தயாரிப்பாளர்களான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விண்ணைத்தாண்டி வருவாயா-2 விஜய ராகவேந்திரா மற்றும் ‘ஸ்கிரீன் ஸீன்’ அதிபர் பூமி பில்டர்ஸ் சுந்தர் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்புவுக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுளளது.
அதே சமயம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சிம்பு மீது நேற்று மேற்கண்ட தயாரிப்பாளர்கள் ஓன்று சேர்ந்து, மோசடி புகார் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை உடனடியாக இந்தியா அழைத்து வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சிம்பு மீதான மோசடி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தாய்லாந்திலிருந்து உடனடியாக திரும்ப வேண்டிய கட்டாயம் சிம்புவுக்கு ஏற்பட்டுள்ளது