Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

சீறுவது நலம், சீறு…! (விமர்சனம்.)

admin by admin
February 7, 2020
in Reviews
431 4
0
602
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  டாக்டர் ஐசரி கே.கணேஷ் ,கதை, இயக்கம் : ரத்னா சிவா ,இசை :டி .இமான் , ஒளிப்பதிவு :பிரசன்னா எஸ்.குமார் ,பாடல்கள் :விவேகா,பார்வதி 

You might also like

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

ஜீவா ,ரியாசுமன் , சதீஷ் ,நவ்தீப் ,வருண் ,ஆர் என் ஆர் மனோகர் ,காயத்ரி .

************

தியேட்டரை விட்டு வெளியே வந்து வெகுநேரமாகியும் நெஞ்சில் ஒட்டிய “செவ்வந்தியே ” பாடல் அகலுவதாக இல்லை. இமானின் மெல்லிசைப்பாடல்களில் இதுவும் இணைந்து கொள்கிறது.அதிலும் பார்வையற்ற ஒரு இளைஞர் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் பலம். இமானின் தேடல் மற்ற முன்னணி இசை அமைப்பாளர்களுக்கு நல்வழிகாட்டி. வாழ்த்துவோம்.!

இனி கதைக்குள் செல்லலாம்.

படத்தின் வலுவே ஜீவாவும் ,மல்லியாக வருகிற வருணும்தான். இவர்கள் இருவருக்குமிடையேயான மோதல் நவ்தீப் பக்கமாக சென்றதும் பிற்பாதி திரைக் கதையில் சற்று சறுக்கல்.இயக்குநர் ரத்னசிவாவுக்கு கமர்ஷியல் ஆக்சன் மசாலா கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்.

 மயிலாடுதுறையில் கேபிள் டிவி வைத்து நடத்துகிற ஜீவா இவரது நண்பர் சதீஷ் இருவரும் லோக்கல் எம்.எல்.ஏ.வான  ஆர்.என் ஆர் மனோகரின் அடாவடித்தனங்களை வெளியிட சிக்கல் முற்றுகிறது. ஜீவாவை போட்டுத்தள்ள கூலிப்படை வருணை வரவழைக்க அவர் ஜீவாவின் தங்கையை காப்பாற்றுகிறார். நன்றி தெரிவிக்க சென்னைக்கு செல்கிற ஜீவா அங்கு வருணை காப்பாற்ற வேண்டிய நிலைமை உருவாகிறது. இதன் பிறகுதான் முக்கிய வில்லனான வக்கீல் நவ்தீப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அது எத்தகைய ஜீவ -மரண போராட்டத்தை உருவாக்குகிறது என்பதுதான் மீதிக் கதை.

ஜீவாவுக்கு வசதியான கிரவுண்டு. ஆக்சன் ,சென்டிமென்டு ,காதல் என கலந்து கட்டி விளையாடுகிறார்.”எனக்கே சென்னை லாங்குவேஜா ?” என கலாய்க்கிற இவர் கோவிலில் “இவனுங்களை அடிச்சா மழை வராதா, மரங்களை வெட்டுனாத்தான்யா  மழை வராது”என்று குருக்களுக்கு செம நக்கல் விடுகிறார். தங்கை காயத்ரியை  பாப்பா பாப்பா என்று அழைப்பதில் ரத்தபாசம் தெரிகிறது. டெலிபோன் பூத் காட்சி ஒன்று போதும் ஆக்சன் பிளாக்கில் எவ்வளவு வெறித்தனம் இருக்கிறது என்பதற்கு.!எலும்புகள் நொறுங்குகிறது.

மல்லியாக வருகிற வருணுக்கு கவுதமின் பின்னணி குரல் செம மிரட்டலாக பொருந்துகிறது. வருணின் ஆவேசத்துக்கு அந்த குரல் எடுப்பாக இருக்கிறது. இதுவரை வந்த படங்களில் வருண் எப்படியோ இருந்திருக்கலாம் ஆனால் இந்த படம் அவருக்கு புதிய தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.கல்விக்குடும்பத்திலிருந்து ஒரு திரைக் கலைஞன்.

தங்கை இலக்கியாவாக காயத்ரிக்கு வெயிட்டான கேரக்டர். பிரசவவலியினால் துடிக்கிறபோது அண்ணன் வெளியே போய்விட்டானே என்கிற ஆதங்கம் ,கோபம் ,ஆனாலும் அதை வெளிப்படுத்த முடியாதபடி வலி,பிட் ஸ் வந்து விடக்கூடாது என்கிற பயம் இவை அத்தனையும் மொத்தமாக கலந்து காட்டுகிற முகம் –சூப்பர்.!

எம்.எல்.ஏ. ,பணக்கார தாதா இந்த மாதிரி கேரக்டர்களுக்கென நேர்ந்து விடப்பட்டவர்  ஆர்.என்.ஆர்.மனோகர். பொருந்திப் போகிறார்.

சதீஷ் துணை மாப்பிள்ளை மாதிரி.! கேரக்டரின் நண்பனாக வந்து போகிறார்.

சமூகவிரோதிகளுக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த படத்திலும் இருக்கிறார்கள். 

“வா வாசுகி ” என்கிறபாடலை  விட  “செவ்வந்தியே ” என்கிற பாடல்தான் அகம்,செவி இரண்டிலும் தங்குகிறது. இமானுக்கு மறுபடியும் வாழ்த்துகள்.

சீறு- பார்க்கலாம்.

சினிமா முரசத்தின் மார்க்கு. 3 / 5

Tags: ஐசரி கணேஷ்காயத்ரிசதீஷ்சீறுசுமன்ஜீவாடி.இமான்ரத்னசிவாரியாவருண்
admin

admin

Related Posts

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!
Reviews

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!

by admin
April 11, 2026
‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!
Reviews

‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!

by admin
April 12, 2026

Recent News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

April 15, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

April 15, 2026
ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

April 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?