எஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் !

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 25) காலை 11 மணிக்கு அரசு அரசு மரியாதையுடன் அவரது அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எஸ்பிபியின் மறைவு இந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சல்மான்கான்:
‘எஸ்பிபி சார் உங்களைப் பற்றிக் கேட்டதும் இதயம் உடைந்தது. உங்கள் மறுக்க முடியாத இசையின் வழியே என்றென்றும் வாழ்வீர்கள், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’

மாதுரி தீட்சித்:
‘ஒரு சகாப்தத்தின் முடிவு. உங்கள் குரல் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒலிக்கும் எஸ்பிபி ஜி. ஒரு மந்திரத்துடன் உங்கள் இசையை நீங்கள் நெய்த விதத்திற்கு இணையில்லை. உங்கள் மகத்துவம் என்றென்றும் வாழும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’.

நடிகர் ஷாருக்கான்:
“எஸ்.பி.பி அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். புகழ்பெற்ற பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் அவரது இனிமையான குரலை இழக்க நேரிடும்’ .

நடிகர் ஆமிர் கான்:
” எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். நமது காலகட்டத்தின் மிகச்சிறந்த திறமையாளர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.”

நடிகர் ரஜினிகாந்த்:
“பாலு சார், நீங்கள் பல ஆண்டுகள் என்னுடைய குரலாக இருந்தீர்கள். உங்களுடைய குரலும் நினைவுகளும் எனக்குள் என்றென்றைக்கும் வாழும்.. நான் உங்களை உண்மையாக மிஸ் பண்றேன்”

நடிகர் கமல்ஹாசன் :
‘வெகுசில பெரும் கலைஞர்களுக்கே தான் வாழும் காலத்திலேயே அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப்பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி.. நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தபடியே அவரை வழி அனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களின் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..அவர், நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்ததற்கு நன்றி. அவரின் குரலின் நிழல்பதிப்பாக பலகாலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேரு. பலமொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர், ஏழு தலைமுறைக்கு அவர் புகழ் வாழும்’

சிவகுமார்;
‘அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன். மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன். இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாக பண்பின் சிகரமாக இறுதி உரையிலும் வெளிப்படுத்தியவன். இதுவரை மக்களுக்குபாடியது போதும், இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி’.

சத்யராஜ்:
“எஸ்பிபி சார், 40,000 பாடல்கள். உங்கள் குரலுக்கு வாயசைக்கும் பெரும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தினருக்கும், நான் உட்படக் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறக்க முடியாது பாலு சார். மறக்கவே முடியாது”.

இளையராஜா;
“பாலு சீக்கிரம் எழுந்து வா.. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என நான் சொன்னேன்.நீ கேட்கவில்லை. உன் வார்த்தை கேட்வில்லை.. போய்விட்டாய். எங்கே போனாய்? கந்தவர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா? இங்கு உலகம் ஒரு சூனியமாகிவிட்டது.பேசுவதற்கு பேச்சு வரவில்லை. சொல்வதற்கு வார்த்தையில்லை. என்ன சொல்வது என தெரியவில்லை. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதுக்கு அளவு இல்லை”

ஏ.ஆர்.ரஹ்மான்;
“ஆழ்ந்த இரங்கல்கள். பேரிழப்பு. வெற்றி, காதல், களிப்பு மற்றும் பக்தியின் குரல் எஸ்.பி.பி உடையது”

சீயான் விக்ரம்;
“மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும்.  இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.  திரு S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.   அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.”

தனுஷ்;
‘ஆழ்ந்த இரங்கல் எஸ்பிபி சார். ஒவ்வொருவரின் வீட்டிலும் எப்போதும் எதிரொலிக்கும் ஒரு குரல். அனைவரது வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர். அடுத்து வரும் தலைமுறையினரிடமும் நீங்களும், உங்களது குரலும் வாழும். அவருடைய குடும்பத்தாருக்கும், நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’.

விவேக்:
“பெரும் இழப்பு இசை உலகத்திற்கு பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது. சிலர் வாழ்வு சாதனை; சிலர் வாழ்வு சரித்திரம்; ஆனால் சிலர் வாழ்வோ சகாப்தம்! அப்படி ஒரு சகாப்தம் SPB. இன்னொரு SPB இனி என்றோ?”

சிவகார்த்திகேயன்;
‘இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது.. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்…இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்’.

உதயநிதி;
‘ஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல். இதயம் கனக்கும் அஞ்சலி. கலைஞர்களுக்கு மரணம் இல்லை. என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள் எஸ்.பி.பி சார். அவரது குடும்பத்தினருக்கு, ரசிகர்களில் ஒருவனாக எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்யா:
“இதயம் உடைந்துவிட்டது, உங்களது அனைத்து இசைக்கும் நினைவுகளுக்கும் நன்றி சார்.நீ வாழ்வாய் இவ்வையகம் உள்ள வரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய் எங்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும்.. நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை”

மாதவன்;
‘சொர்க்கம் எல்லாம் அதிர்ஷ்டம் வாய்ந்தவை எஸ்பிபி சார்’

திரிஷா;
‘அன்புள்ள எஸ்பிபி சார், இது ஒரு தனிப்பட்ட இழப்பாகவே தோன்றுகிறது. நீங்கள் பாடிய படங்களில் நானும் ஒரு பங்கு பெற்றுள்ளேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் இசைக்கு மிக்க நன்றி. சாதனையாளர்கள் என்றென்றும் இருப்பர்

சமந்தா:
‘இன்னொரு எஸ்பிபி கிடையவே கிடையாது. தாங்க முடியாத ஒரு இழப்பு. அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்’.

கீர்த்தி சுரேஷ்;
‘ஒரு சகாப்தம் நிறைவடைந்தது. அந்தக் குரலை யாராலும் நிரப்ப முடியாது. ஒரு பெருமை என்றென்றும் பாடியது’.

ஸ்ருதிஹாசன்;
‘எஸ்பிபி சார் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். உங்கள் கலைத்திறனுக்கும் உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. சொர்க்கத்தின் அரங்குகள் உங்கள் மெல்லிய குரலால் நிரப்பப்படட்டும். நீங்கள் குடும்பமாக இருந்தீர்கள், உங்கள் இழப்பு இதயத்தை நொறுக்கிவிட்டது’.

பிரியா பவானி சங்கர்:
‘எஸ்பிபி., அவர்கள் இல்லாத உலகம்! ஒரு நூற்றாண்டின் குரல் ஒய்ந்திருக்கிறது. எத்தனை நட்சத்திரங்களை உருவாக்கிய குரல். எத்தனைப் பேரை ஆட வைத்த, சிரிக்க வைத்த, காதலிக்க வைத்த, அழ வைத்த குரல்! காற்று இருக்கும் வரை கேட்க இருக்கும் குரல். இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்ற குரல்.

அஞ்சலி:
‘ஒரு சகாப்தத்தின் முடிவு. உங்கள் மகத்துவம், பெருமை ஒப்பிடமுடியாத ஒன்று சார், அது தொடரும்’

தமன்னா:
‘எஸ்பிபி சாரின் மறைவுச் செய்தியை உணர்ந்து கொள்ள முடியவில்லை. உங்கள் தெய்வீக இசை இணையற்ற ஒன்றாக இருக்கும். உங்கள் மகத்துவம் என்றென்றும் வாழும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

நதியா:
‘எஸ்பிபி சார், நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. உங்கள் இசை மகத்துவத்தின் இசை ரசிகர்களாய் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது ஒரு வருத்தமான நாள். உங்கள் பாடல்கள் எங்களுடன் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன, இன்னும் பல வருடங்கள் அது எங்களுடன் கூட வரும்’.

சிம்ரன்:
‘எஸ்பிபி அவர்களது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இல்லாமல் இசை அப்படியே இருக்காது. அவரது ஆத்மா நித்ய அமைதியில் நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தாருக்கும் அன்பாவனவர்களுக்கும் இரங்கல்’.

அனிருத்:
‘தேசத்தின் குரல் இப்போது இல்லை. ஆழ்ந்த வருத்தங்கள். ஸ்டுடியோவில் உங்களுடன் மதிப்பு மிக்க நினைவுகள், மறக்க முடியாதவை. உங்களையும், உங்கள் அன்பையும் பிரிகிறோம் சார்.

சந்தோஷ் நாராயணன்:
‘நம் காலத்தின் மிகப் பெரும் கலைஞன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். எஸ்பிபி சார் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், எண்ணிலடங்கா ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் இசை எங்களுடன் எப்போதும் புதையல் போல இருக்கும் சார்.

தமன்:
மாமா, எனது அழுகையை அடக்க முடியவில்லை. அன்பு மாமா உங்களை மிஸ் செய்கிறோம்.

ஜிவி பிரகாஷ்குமார்:
உங்கள் குரல் அப்படியே இருக்கும், அதற்கு முடிவே கிடையாது சார்.

விஜய் ஆண்டனி:
‘போகும் பாதை தூரமே…வாழும் காலம் கொஞ்சமே..இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’

ஹரிஹரன்:
இது ஒரு பெரிதும் எதிர்பார்க்க முடியாமல் நடந்த ஒன்று, மிகவும் சோகமானது. எஸ்பிபி சார் மிகவும் பணிவானர், உதவி செய்யும் மனிதர். நமது நாட்டில் உள்ள பின்னணிப் பாடகர்களில் தனித்துவமான ஒரு பாடகர். இசை உலகத்தை ஆட்சி செய்தவர் அவர். எனக்கு அவர் மூத்த சகோதரர். அவர் ஒரு இன்ஸ்பிரேஷன், எனக்கு மிகவும் அன்பாவனவர். அண்ணா, உங்களை மிஸ் செய்கிறேன்.

ஸ்ரேயா கோஷல்:
சாதனையாளர் எஸ்பிபி மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். சிறந்த கலைஞர், மனிதன், நம்ப முடியாத ஆளுமை கொண்டவர், உற்சாகமானவர், மிகவும் தாழ்மையானவர். அவருடன் பல பாடல்களைப் பாடியுள்ளேன். அவரது ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது பெருமை. எஸ்பிபி சார், உங்கள் பெருமை உங்கள் இசை வழியே காலம் இருக்கும் வரை தொடரும்

தேவிஸ்ரீபிரசாத்:
‘கடந்த 24 மணி நேரமாக தூங்கவில்லை, ஒரு அதிசயம் நிகழும் என்று பிரார்த்தித்தேன், எதிர்பார்த்தேன். இப்படி ஒரு பேரதிர்ச்சியான செய்தி வரும் என கண்டிப்பாக நினைக்கவில்லை. இந்த சமயத்தில், அவருக்கு தேசிய அளவில் ஒரு பிரியாவிடை கொடுக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். இதயம் ஏற்றுக் கொள்ளவில்லை, வலிகளைச் சொல்ல வார்த்தையில்லை.

மணிசர்மா:
‘இந்திய இசையுலகத்திற்கு கருப்பு நாள். இசையின் என்சைக்ளோபீடியா, எனது இன்ஸ்பிரேஷன், என்னுடைய சகோதரரை இழந்துவிட்டேன். இசையை உருவாக்குவதிலும், முழுமையாக்குவதிலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றேன். எனக்குத் தெரியாத உலகத்தைப் பார்த்துள்ளேன். அவரிடமிருந்துதான் இந்த உலகத்தில் எப்படிப் பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். என்னுடன் இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களால் மட்டுமே நான் இங்கிருக்கிறேன். நான் உங்களை இழக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் என் ரத்தத்தில் இருக்கிறீர்கள். உங்கள் அன்பு சகோதரன், மிகப் பெரும் ரசிகன்.

செல்வராகவன்:
“தன்னையே இழந்ததில் நிலா என்றும் அழுது கொண்டிருக்கும்”

நாகார்ஜுனா:
‘பாலு காரு உடனான நினைவுகளும், உரையாடல்களும் மீண்டும் கண்ணீரில் மிதக்க வைக்கிறது. அன்னமய்யா படம் வந்த போது அவரிடமிருந்து வந்த அழைப்பு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர் என்னுடைய வாழ்க்கையின் சொல்லப்படாத ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தார்.’

மம்முட்டி:
‘சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா, இன்னும் இருக்கா…எஸ்பிபி , உண்மையான சாதனையாளர், ஆழ்ந்த இரங்கல்

மோகன்லால்:
‘இசை உலகிற்கு உண்மையான இழப்பு, இதயம் உடைந்துவிட்டது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்’