பிரபல நடிகையின் தந்தை கொரோனாவுக்கு பலி !

தமிழில், சசிகுமார் நடித்த, வெற்றிவேல், கிடாரி,மற்றும் பஞ்சுமிட்டாய், கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை நிகிதாவிமல் . தற்போது சிபிராஜ் ஜோடியாக ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தந்தை பவித்ரன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய துணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்  பவித்ரனுக்கு (வயது 61). கொரோனா தொ ற்று ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் நிகிதாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.