அஜித் பாணியில் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுகிற மின்னல் வேக தமிழ் நடிகை.!
நிவேதா பெத்துராஜ் ,
ஒருநாள் கூத்து படத்தின் வழியாக அறிமுகமானார்.பின்னர் என் மனசு தங்கம் ,சங்கத்தமிழன் ,திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
பிரபுதேவாவுடன் நடித்திருக்கிற பொன் மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் விரைவில் வரவிருக்கின்றன.தமிழ் தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகைகளில் சிலர் வேகமாக கார் ஓட்டுகிற பழக்கம் உள்ளவர்கள் .ஆனாலும் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ்ச்சினிமாவில் வேகமாக ,துணிச்சலாக ஸ்போர்ட்ஸ் கார் ,பைக் ஓட்டுகிற ஒரே நடிகர் அஜித்குமார் மட்டுமே.!
தற்போது நிவேதா பெத்துராஜ் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுகிற பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இது அவரது கனவு மற்றொரு வாழ்க்கை என்பதாக சொல்கிறார்.
சரி முயற்சி திருவினையாக்கும். ஏதேனும் சந்தேகம் வருமானால் அஜித்திடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.
அவர் வெளியிட்டுள்ள படங்கள், வீடியோ வைரலாகி வருகின்றன.